
திருவனந்தபுரம்: போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனையும், விசாரணையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். நடிகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலில் நடந்த போதைப்பொருள் தடுப்புச் சோதனையின் போது, அங்கிருந்து தப்பிச் சென்றது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சாக்கோவுக்கு கொச்சி போலீஸார் நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்றைக்கு இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.