
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவில், “நான் ஒலி வடிவமைத்த காரிலிருந்து தனக்கென ஒன்றை முன்பதிவு செய்யப் போகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
விளையாட்டாகவே அதைக் கூறினார் எனக் கருதப்பட்டது. ஆனால், அவர் உண்மையிலேயே புதிய XEV 9E – SUV காரை வங்கியிருக்கிறார்.
AR ரஹ்மான் புத்தம் புதிய XEV 9E காருடன் இருக்கும் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மஹிந்திரா நிறுவனம் டாப்-எண்ட் பேக் த்ரீ வேரியண்டை மட்டுமே டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. AR ரஹ்மான் வாங்கியிருப்பதும் அதே வேரியண்ட் கார்தான்.
இந்தக் கார் குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்குப் பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e வாங்கினேன். இந்த ஸ்டைலான இந்திய காருக்கான ஒலியை நாங்கள் வடிவமைத்தோம்… (இதற்கும் பணம் செலுத்தினோம் )” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…