
பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா 2’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கொச்சியில் ஒரு ஓட்டலில் போதைப் பொருள் விற்பதாகக் கூறி போலீஸார் சோதனை நடத்த இருந்தனர். இந்த விஷயம் தெரிந்த ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், ஷைன் டாம் சாக்கோ மீது குற்றம் சாட்டியுள்ளார். இருவரும் இணைந்து ‘சூத்ரவாக்யம்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ‘அம்மா’ ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. வின்சியின் புகார் குறித்து திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஷான் டைம் சாக்கோவுக்கு அந்த குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.