• April 18, 2025
  • NewsEditor
  • 0

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியிட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Thug Life press meet

இதில் பேசியிருக்கும் கமல், “இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுறேன். இது அரசியல் கிடையாது. தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை 2000 வருஷமாக செய்றோம். இன்னைக்கு வெவ்வேறு பகுதிகள்ல இருந்து வந்திருக்காங்க. அபிராமி 11 வயசுல நடிக்க வந்ததாக சொன்னாங்க.. பக்கத்துல த்ரிஷா இருக்காங்கனு பார்த்து சொல்லியிருக்கலாம்.

அப்படிதான் சிம்பு வந்தாரு

இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள். வியாபாரக் கணக்குல சிலரைப் படதுக்குள்ள கொண்டு வருவாங்க. மக்கள் முடிவுக்கும் விருப்பதுக்கு விநியோகஸ்தர்கள் தலை வணங்குவாங்க. அப்படிதான் புதிய திறமைகள் வர்றாங்க. அப்படிதான் சிம்பு வந்தாரு. அவங்க அப்பா வந்தாரு. இயக்குநர் பெயர் வெறும் மணி ரத்னம் கிடையாது. 5.30 மணி ரத்னம். சரியாக அத்தனை மணிக்கு வந்திடுவார்.

இரவு முழுக்க அதே நினைப்போடா இருந்தால்தான் அலாரம் இல்லாமல் வரமுடியும். ‘நாயகன்’ படத்துல இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருக்கு. இந்த விஷயத்துல அவர்கிட்ட நான் பாலசந்தரைப் சாரை பார்த்தேன்.

டி.ஆருக்கு என் மேல அளப்பரிய பிரியம். எனக்கு ஒன்னுனா ஓடி வந்திடுவார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்ங்கிற மாதிரி சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார். இந்தப் படத்துல எனக்கு ரெண்டு கதாநாயகிகளும் ஐ லவ் யூ சொல்லவே இல்ல. இந்தப் படத்தில எனக்கு ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ்தான்.

நானும் ரஹ்மானும் ஒப்பன்ஹைமர் சினிமாவை ஒன்றாக லாஸ் ஏஞ்சல்ஸ்ல பார்த்தோம்.

மணிரத்னம் முதல் முறையாக..!

இன்னைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதே முக்கியம். நான் முன்னாடி சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னாரு. அந்த கதையிலிருந்து இன்ஸ்பயராகி அவர் களத்துல பயணிச்சிருக்கார். பெண்ணை கொடுத்தாச்சு. மாப்பிளை அவரு. குழந்தை எப்படி வருதுன்னு பார்க்கணும்.

நடிகர் கமல்

மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துல படம் பண்ணியிருக்கார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தால்கூட சினிமா பற்றிதான் பேசுவேன். நீங்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும்.

பழகுனா சினிமாவையே நீங்க பார்பீங்களா? நான் தினமும் கத்துக்கிறேன். கத்துகிட்ட விஷங்களை மறக்க நினைக்கிறேன். மொழி போர் நடந்துட்டு இருக்குற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ரஹ்மான் கொடுத்த ஐடியாவை ஜிங்குச்சானு வார்த்தையை பயன்படுத்தினோம். அது சீனா வார்த்தையாகக் கூட இருக்கலாம்.” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *