
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் 90-களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோ. இப்போது வில்லனாக, குணச்சித்திர நடிகராக எனப் பல முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் விமரிசையாக திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு ‘ஹேண்ட் பேக்’ தாயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், மொத்த குடும்பமும் இத்தாலியில் இருக்கும்போது, “கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்’ எனக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.